» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கூடங்குளம் அணுக்கழிவுகளை அகற்ற கோரி மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
சனி 3, ஜூன் 2023 12:50:00 PM (IST)
கூடங்குளம் அணுக்கழிவுகளை அகற்ற கோரி, மத்திய அரசுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார் என, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
இது குறித்து புதுக்கோட்டையில் அவர் நேற்று கூறியதாவது: ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை தமிழக அரசே அகற்ற முடிவு செய்துள்ளது. முதல்வரின் இந்த முடிவு, அனைத்து தரப்பு மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதே போல, கூடங்குளத்தில் உள்ள அணுக்கழிவுகளை, மத்திய அரசு அகற்ற வேண்டும் என்று, மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார் என அமைச்சர் கூறினார்.