» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் : வன்முறையை துண்டியதாக சீமான் மீது வழக்கு!

சனி 25, மார்ச் 2023 4:59:05 PM (IST)

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வன்முறையை தூண்டுதல் உட்பட 5 பிரிவுகளில் திருச்சி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ராஜீவ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டவர்களை திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்யக் கோரி திருச்சியில் நேற்று முன்தினம் நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து பொதுக்கூட்டம் போன்று மேடை அமைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேசும்போது, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டது குறித்தும் கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து, வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியது, சட்டவிரோதமாக கூடுதல், கலகம் செய்ய தூண்டுதல், அமைதியை சீர்குலைக்க தூண்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் சீமான் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் மீது திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory