» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தனியார் மருத்துவமனையில் நர்ஸ் குத்திக் கொலை : நடத்தை சந்தேகத்தில் கணவர் வெறிச்செயல்!
செவ்வாய் 4, அக்டோபர் 2022 11:17:19 AM (IST)
கோவை தனியார் மருத்துவமனையில் நர்சை அவரது கணவர் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை, ரத்தினபுரியை சேர்ந்தவர் நான்சி (27). குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் நர்ஸ் ஆக வேலை பார்த்து வந்தார். கணவர் வினோத் (32). தம்பதிக்கு, 8 வயதில் குழந்தை உள்ளது. தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், 2 ஆண்டுக்கு முன் இருவரும் பிரிந்து தனித்தனியாக வசித்தனர். தன் மனைவிக்கு, வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக கணவருக்கு சந்தேகம் இருந்தது.நேற்று மதியம், மனைவியை தேடி, அவர் வேலை பார்க்கும் மருத்துவமனைக்கு வினோத் சென்றார்.
அங்கிருந்த நான்சியிடம், கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக குற்றம் சாட்டினார். இருவருக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது. திடீரென வினோத், தன்னிடம் இருந்த கத்தியால் மனைவி நான்சியை சரமாரியாக குத்தினார்.நான்சி, ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து, அதே இடத்தில் உயிரிழந்தார்.அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள், பாதுகாவலர்கள் இணைந்து கொலை செய்த வினோத்தை மடக்கிப்பிடித்தனர். அவர், ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்துகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மழைக் காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பதில் குழப்பம்: அதிகாரிகள் விளக்கம்!!
வெள்ளி 1, டிசம்பர் 2023 11:14:35 AM (IST)

குமரியில் வாகன கட்டணம் இருமடங்கு வசூல்: சுற்றுலா பயணிகள், பக்தர்கள் அதிர்ச்சி
வியாழன் 30, நவம்பர் 2023 5:54:02 PM (IST)

அதிமுக சின்னத்தை பயன்படுத்த விதித்துள்ள தடையை மீறப்போவதில்லை: ஓபிஎஸ்
வியாழன் 30, நவம்பர் 2023 5:13:25 PM (IST)

அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து நிவாரண பணி மேற்கொள்ள முதல்வர் உத்தரவு
வியாழன் 30, நவம்பர் 2023 4:58:37 PM (IST)

நெல்லை, தென்காசியில் மீண்டும் மழை: 110 அடியை நெருங்கியது பாபநாசம் அணை!
வியாழன் 30, நவம்பர் 2023 4:52:38 PM (IST)

அமைப்புசாரா தொழிலாளர்கள் மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்!
வியாழன் 30, நவம்பர் 2023 4:40:28 PM (IST)
