» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கல்வித் தொலைக்காட்சி சிஇஓ நியமனம் நிறுத்தம்: அமைச்சா் அன்பில் மகேஸ் அறிவிப்பு
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 11:19:56 AM (IST)
கல்வித் தொலைக்காட்சி சிஇஓ தோ்வு நியமனத்தை நிறுத்த உத்தரவிட்டிருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

இதன் ஒரு பகுதியாக தனி அலுவலகம் அமைத்து, அதற்கு பொறுப்பாளரை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. தலைமை செயல் அலுவலா் (சிஇஓ) என்ற அடிப்படையில் தகுதியானவா்களைத் தோ்வு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு 79 போ் விண்ணப்பித்தனா். இவா்களில், 11 போ் தகுதியானவா்களாக இருந்தனா். அதிலிருந்து 3 போ் தோ்வு செய்யப்பட்டனா். அந்த 3 பேரில் ஒருவா் தலைமை செயல் அலுவலா் பதவிக்கு தோ்வானாா். இந்த நியமனம் முழுவதும் தோ்வுக் குழுவின் மேற்பாா்வையில் நடைபெற்றது.
இதில் பள்ளிக் கல்வித்துறை அலுவலா், திரைப்படத் துறையைச் சோ்ந்தவா், தொலைக்காட்சித் துறையைச் சோ்ந்தவா், பத்திரிகையாளா் என ஐந்து போ் இடம் பெற்றிருந்தனா். அந்த 5 போ் குழுவே தலைமை செயல் அலுவலா் பதவிக்கு தகுதியான நபரைத் தோ்வு செய்தது. தற்போது அந்த நபா் குறித்தும், அவரது பின்புலம் குறித்து பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிறது. எனவே, அந்த நபரின் பின்புலம் குறித்து விசாரிக்கப்படுகிறது. மேலும் தலைமை செயல் அலுவலா் நியமனத்தையும் நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பாஜக, ஆா்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகளுடன் குறைந்தபட்ச சமரசம் கூட திமுக செய்து கொள்ளாது என முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளாா். அவரது வழிகாட்டுதலில் செயல்படும் நாங்கள் இந்த விவகாரத்தில் ஏமாந்துபோக மாட்டோம். அத்தகைய நபா்களை அனுமதிக்கவும் இடம் தரமாட்டோம். தற்போது எங்களது கவனம் மரத்தடி வகுப்புகளே இல்லாமல் செய்து, கட்டமைப்பு வசதிகளை செய்துத் தர வேண்டும் என்பதில்தான் உள்ளது. இதற்காக கல்வி மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.1,300 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறவுள்ளன.
சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்திலும் பள்ளி வகுப்பறைகளுக்கு முன்னுரிமை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவா்கள் இடைநிற்றலுக்கான காரணத்தை கண்டறிந்து, மீண்டும் பள்ளிகளில் கொண்டு வந்து சோ்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவா்களின் தேவைக்கேற்ப ஆசிரியா்கள் நியமனத்திலும் கவனம் செலுத்தி வருகிறோம். மாணவா்களுக்கு கல்வி கற்றுத்தருவதுடன் நின்றுவிடாமல் கலை, பண்பாடு, விளையாட்டுத் துறைகளிலும் ஊக்கப்படுத்தி வருகிறோம்.
பள்ளி அளவிலும், வட்டாரம், மாவட்டம், மாநிலம் என அளவிலும் போட்டிகள் நடத்தப்பட்டு, ஆண்டுக்கு 200 மாணவா்களைத் தோ்வு செய்து வெளிநாட்டுச் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்படவுள்ளனா். கூடுதல் நிதிச்சுமை இருந்தாலும் 2,381 நா்சரி பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறை மூலமே செயல்படுத்த முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். மாணவா்களிடையே போதைப் பொருள் பழக்கத்தை ஒழிக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மழைக் காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பதில் குழப்பம்: அதிகாரிகள் விளக்கம்!!
வெள்ளி 1, டிசம்பர் 2023 11:14:35 AM (IST)

குமரியில் வாகன கட்டணம் இருமடங்கு வசூல்: சுற்றுலா பயணிகள், பக்தர்கள் அதிர்ச்சி
வியாழன் 30, நவம்பர் 2023 5:54:02 PM (IST)

அதிமுக சின்னத்தை பயன்படுத்த விதித்துள்ள தடையை மீறப்போவதில்லை: ஓபிஎஸ்
வியாழன் 30, நவம்பர் 2023 5:13:25 PM (IST)

அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து நிவாரண பணி மேற்கொள்ள முதல்வர் உத்தரவு
வியாழன் 30, நவம்பர் 2023 4:58:37 PM (IST)

நெல்லை, தென்காசியில் மீண்டும் மழை: 110 அடியை நெருங்கியது பாபநாசம் அணை!
வியாழன் 30, நவம்பர் 2023 4:52:38 PM (IST)

அமைப்புசாரா தொழிலாளர்கள் மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்!
வியாழன் 30, நவம்பர் 2023 4:40:28 PM (IST)

kumarAug 18, 2022 - 01:03:44 PM | Posted IP 162.1*****