» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடிக்கவே நீட் தேர்வு: அமைச்சர் பொன்முடி பரபரப்பு பேச்சு

திங்கள் 16, மே 2022 12:01:49 PM (IST)

தனியார் கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடிக்கவே நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் உதவுகின்றன என ஆளுநர் முன்னிலையில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசினார்.

சென்னை பல்கலைக்கழகத்தின் 164வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது: இந்தியாவின் தலைச் சிறந்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார். நீட் மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்த ஆளுநருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 

மேலும், கல்வி மாநில உரிமையில் இருக்க வேண்டும் என்பதை ஆளுநரிடம் கோரிக்கையாக வைத்திருக்கிறேன். பிளஸ் 2 மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவம், டிகிரி உள்ளிட்ட பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தபப்ட வேண்டும். நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் மாணவர்களுக்கு பயனளிக்காது. தனியார் கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடிக்கவே நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் உதவுகின்றன.  இவ்வாறு அவர் பேசினார்.


மக்கள் கருத்து

ஆமாம்மே 17, 2022 - 09:34:00 AM | Posted IP 162.1*****

திமுகவே பிராடு

TAMILANமே 16, 2022 - 02:20:32 PM | Posted IP 162.1*****

ENNA ULARAL. WHAT ABOUT THE OTHER STATES....PEOPLE PLEASE THINK...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory