» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லையில் 299பேருக்கு கரோனா: 5 போலீசாருக்கு தொற்றால் ஆயுதப்படை கேன்டீன் மூடல்

புதன் 19, ஜனவரி 2022 9:30:13 PM (IST)

நெல்லையில் இன்று ஒரே நாளில் 299பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. 5போலீசாருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் போலீஸ் கேன்டீன் மூடப்பட்டது. 

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று தொடர் ந்து உயர்ந்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக ஒரே நாளில் 707 பேருக்கு தொற்று உறுதியானது. இந்நிலையில் இன்று மாவட்டம் முழுவதும் புதிதாக 692 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மாநகர் பகுதியில் 299 பேரும், வள்ளியூரில் 114 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இன்று பாதிக்கப்பட்டவர்களில் 5 அரசு டாக்டர்கள், கூடங்குளம் அணுமின்நிலைய ஊழியர் கள் 5 பேர், கங்கை கொண்டான் சிப்காட் ஊழியர்கள் சிலரும் அடங்குவர். பாளை ஆயுதப்படை மைதானத்தில் போலீசாருக்கு என கேன்டீன் செயல்பட்டு வருகிறது. அதன் அருகே போலீசார் மற்றும் ஓய்வு பெற்ற போலீசார் சலுகை விலையில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக பல்பொருள் அங்காடியும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் போலீஸ் கேன்டீனில் பணியாற்றும் 5 போலீசாருக்கு தொற்று இன்று உறுதியானது. இதனால் கேன்டீனை 5 நாட்கள் மூட உத்தரவிடப்பட்டது. உடனடியாக கேன்டீன் மூடப்பட்டு அந்த வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதேபோல் தொற்று கண்டறியப்பட்ட அனைவரது தெருக்களிலும், கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுகாதாரபணிகள் தீவிரப் படுத்தப்பட்டு உள்ளது.

மாநகர பகுதியில் தொற்று உயர்ந்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.⭕⭕இன்று முகக்கவசம் அணியாமல் சென்றவர்களை போலீசார் ஆங்காங்கே மறித்து ரூ.500 அபாரதம் வசூலித்தனர். மேலும் சமூக இடைவெளி இன்றியும், அதிக அளவு பொதுமக்கள் திரண்ட கடையின் உரிமையாளரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து மாநகர் பகுதிகளில் போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும், சோதனைகளை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory