» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குன்னூர் அருகே முப்படை தளபதி பிபின் ராவத் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்து

புதன் 8, டிசம்பர் 2021 3:12:11 PM (IST)குன்னூர் அருகே இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ.-17வி5  ரக ஹெலிகாப்டரில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள்  உள்பட 14 பேர் பயணம் மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.  தமிழகத்தின் குன்னூர்- ஊட்டி இடையே மலைப்பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது அந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

விபத்து நடந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சி அளித்தது. உடனடியாக அந்த பகுதிக்கு மீட்புபடையினருடன் விரைந்த குன்னூர் ராணுவ முகாம் அதிகாரிகள் எரிந்த நிலையில் இரண்டு உடல்களை மீட்டனர்.  இதுவரை 6 உடல்களை மீட்கப்பட்டுள்ளன. மேலும், மலை அடிவாரத்தில் கிடக்கும் உடல்களை  மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.  இந்த விபத்து குறித்து விமானப்படை மற்றும் ராணுவம் தரப்பில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Nalam Pasumaiyagam


Thoothukudi Business Directory