» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லை பேருந்து நிலையம் செயல்பட துவங்கியது : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

புதன் 8, டிசம்பர் 2021 12:01:56 PM (IST)ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட திருநெல்வேலி பேருந்து நிலையத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழகத்தில் பல பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இந்த திட்டத்தின் மூலம் நெல்லை, மதுரை, தஞ்சாவூர் பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. கடந்த ஆண்டு இந்த புதுபிக்கும் பணி தொடங்கி தற்போது முடிவடைந்துள்ளது. 

இந்நிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கீழ் புதுப்பிக்கப்பட்ட மதுரை, நெல்லை மற்றும் தஞ்சை பஸ் நிலையங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். 

இதனுடன் நகராட்சி நிர்வாக துறை, தமிழ் வளர்ச்சித்துறை, மற்றும் இந்து சமய அறநிலையத் துறை ஆகிய துறைகளின் திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், துரைமுருகன், கே.என்.நேரு, தா.மோ. அன்பரசன், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மற்று அதிகாரிகள் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes
Nalam Pasumaiyagam

Thoothukudi Business Directory