» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சொத்து குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உட்பட 43 இடங்களில் சோதனை

திங்கள் 18, அக்டோபர் 2021 10:22:40 AM (IST)

வருமானத்துக்கு அதிகமாக ரூ 27 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வாங்கி குவித்ததாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடு உள்பட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து வாங்கி குவித்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார்கள் வந்தன. அந்தப் புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.  இதில் விஜயபாஸ்கர் தன் பெயரிலும், தன் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் பெயரிலும் சொத்துக்களை வாங்கி வைத்திருப்பதும், அந்த சொத்துக்கள் முறையான வருவாயில் வாங்கப்படாமல் பிற வழிகளில் வாங்கப்பட்டிருப்பதும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தெரிய வந்தது. 

இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விஜயபாஸ்கர் மீதும் அவர் மனைவி ரம்யா மீதும் சொத்துக்குவிப்பு வழக்கை பதிவு செய்தனர். இந்த வழக்குக்கான ஆதாரங்களையும், தடயங்களையும் திரட்டும் வகையிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சென்னையில் உள்ள விஜயபாஸ்கர் வீடு, புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள அவரது குடும்ப வீடு உள்ளிட்ட 43 இடங்களில் திங்கட்கிழமை காலை ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையை தொடங்கினர். 

இச்சோதனை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நடைபெறுகிறது. சோதனை நடைபெறும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இச்சோதனை அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கெனவே சொத்துக்குவிப்பு வழக்கு, ஊழல் வழக்கு என அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் 3 பேர் மீது இதுபோன்ற நடவடிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறையினர் எடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital





Thoothukudi Business Directory