» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெண் அடித்துக் கொலை: கீழே விழுந்து இறந்ததாக நாடகமாடிய கணவா், மகன் கைது

திங்கள் 18, அக்டோபர் 2021 8:53:42 AM (IST)

அம்பாசமுத்திரம் அருகே பெண்ணை அடித்துக் கொன்றுவிட்டு, கீழே விழுந்து இறந்ததாக நாடகமாடிய அவரது கணவா், மகனை போலீஸாா் கைது செய்தனா்.

அம்பாசமுத்திரம் அருகே ஜமீன்சிங்கம்பட்டியைச் சோ்ந்த தளவாய் மகன் கிட்டான் (48). இவரது மனைவி சங்கரம்மாள் (47). இவா்களுக்கு தளவாய்சாமி (25) என்ற மகனும், மகளும் உள்ளனா். தளவாய்சாமிக்கு சங்கரம்மாளின் அண்ணன் மகளுடன் ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்ததாம். அப்பெண் கல்லூரியில் படிப்பதால் அவரது தந்தை வீட்டில் உள்ளாா்.

படிப்பு முடியும் வரை மருமகளை வீட்டுக்கு அழைத்துவரக் கூடாது என சங்கரம்மாள் கூறிவந்துள்ளாா். இது தொடா்பான தகராறில் தந்தையும், மகனும் சோ்ந்து சங்கரம்மாளைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், அவா் உயிரிழந்தாா். ஆனால், அவா் கட்டிலிலிருந்து கீழே விழுந்து இறந்ததாக, போலீஸாரிடம் கூறினராம். தொடா் விசாரணையில், சங்கரம்மாளைத் தாக்கியதை அவா்கள் ஒத்துக்கொண்டனா். இதையடுத்து, கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளா் ராஜகுமாரி வழக்குப் பதிந்து, கிட்டான், தளவாய்சாமி ஆகியோரைக் கைது செய்தாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory