» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கன்னியாகுமரியில் தொடர் கனமழை: 2 பேர் பலி; 23 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது

ஞாயிறு 17, அக்டோபர் 2021 9:57:53 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையால், 23 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கனமழைக்கு 2 பேர் உயிரிழந்தனர். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் பருவமழையை முன்னிட்டு கடந்த 15 நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது.  எனினும், கடந்த 14ந்தேதி இரவில் இருந்து தொடர்ச்சியாக கனமழை பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதும் மழைநீர் நிரம்பி வெள்ள காடாக உள்ளது.  கன்னியாகுமரியின் நீர் ஆதாரமாக திகழும் பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 45.71 அடியாக உயர்ந்து உள்ளது.

பேச்சிப்பாறை, குற்றியாறு, கடையாலுமூடு, களியல் உட்பட குமரி மலை கிராமங்களில் 50க்கும் மேற்பட்ட சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மலை கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன.

மழையால் தோவாளை பகுதியில் இறுதிக்கட்ட அறுவடைக்கு தயாராக இருந்த 50 ஏக்கருக்கு மேற்பட்ட நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கின.  குமரி மாவட்டத்தில் மழைக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர். மழை வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட ஒருவரை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர். கன்னியாகுமரியில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால், 23 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.  இதனால், அங்கிருந்த மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory