» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்நாடு முழுவதும் நூலகங்களை திறக்க பொதுநூலக இயக்குனரகம் அனுமதி

சனி 24, ஜூலை 2021 4:46:20 PM (IST)

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நூலகங்களை திறக்க பொதுநூலக இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது. சிறுவர்கள், கர்ப்பிணிகள், 65 வயதானவர்கள் நூலகம் வர அனுமதியில்லை.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் அனைத்து நூலகங்களும் மூடப்பட்டன. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டபோது நூலகங்கள் திறக்கப்படாத நிலையில் பலரும் நூலகங்களை திறக்க கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கட்டுப்பாடுகளுடன் இன்று முதல் நூலகங்களை திறக்க பொதுநூலக இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது.

நூலகத்திற்கு வருவோருக்கான கட்டுப்பாடுகள்

* போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள பொது நூலகங்கள் இன்று முதல் திறக்க அனுமதிக்கப்படுகிறது.

* கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள நூலகங்களை தவிர்த்து பிற நூலகங்களைத் திறக்கலாம்.

* 15 வயதிற்கும் குறைவாக உள்ள சிறுவர்கள், கர்ப்பிணிகள், 65 வயதானவர்கள் நூலகம் வர அனுமதியில்லை 

இவ்வாறு, பொது நூலகத்துறை இயக்குனர் நாகராஜ முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

adaminJul 24, 2021 - 04:54:26 PM | Posted IP 162.1*****

sooper

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory