» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

புதுப்பெண்ணை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை: தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு

சனி 24, ஜூலை 2021 8:50:11 AM (IST)

கடையநல்லூரில், புதுப்பெண்ணை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ரகுமானியாபுரம் 3-வது தெருவைச் சேர்ந்தவர் முகமது அப்துல் காதர் (வயது 35), கூலித்தொழிலாளி. இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த தஸ்லீமா நஸ்ரின் பானு (19) என்பவருக்கும் கடந்த 17.4.2016 அன்று திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆகி சுமார் 6 மாதங்கள் புதுமண தம்பதி சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். அப்போது முகமது அப்துல் காதர் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வதற்காக ஏற்பாடு் செய்தார்.

இது அவரது மனைவி தஸ்லீமா நஸ்ரின் பானுக்கு பிடிக்கவில்லை. வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லக்கூடாது என்று அவர் தடுத்தார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் கடந்த 4.11.2016 அன்று வீட்டில் இருந்த முகமது அப்துல் காதர் தனது மனைவி தஸ்லீமா நஸ்ரின் பானுவை கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது அப்துல் காதரை கைது செய்தனர்.

இந்த வழக்கு தென்காசி மாவட்ட அமர்வு கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அனுராதா, முகமது அப்துல் காதருக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சின்னதுரை பாண்டியன் ஆஜரானார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital








Thoothukudi Business Directory