» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தபால் வாக்கு பெட்டிகளை மே 1ஆம் தேதி திறக்க கூடாது: அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை

வியாழன் 22, ஏப்ரல் 2021 5:50:02 PM (IST)

மே 1ம் தேதி, தபால் வாக்கு பெட்டிகளை  திறக்கக்கூடாது என்று அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து மனு அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், வாக்கு எண்ணிக்கை நாளான மே 2ம் தேதி தான் தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டும் என்றும் அதற்கு முன்பாக மே 1ம் தேதி எந்த சூழலிலும் ஸ்டார்ங் ரூம் திறக்க கூடாது என வலியுறுத்தி உள்ளோம் என தெரிவித்துள்ளார்.

சில மாவட்டங்களில் மே 1ல் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. தபால் வாக்கு தொடர்பாக அதிமுக தலைமைக்கு கிடைத்த தகவலை தெரிவித்துள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், வாக்கு எண்ணிக்கையில் மேஜைகளை குறைக்கக்கூடாது என்றும் கடந்த கால விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesThalir Products
Nalam PasumaiyagamThoothukudi Business Directory