» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தவறான சிகிச்சை காரணமாக ரூ. 1 கோடி இழப்பீடு கோரும் நடிகை ரைசா வில்சன்

வியாழன் 22, ஏப்ரல் 2021 3:30:46 PM (IST)

தவறான சிகிச்சையால் ஏற்பட்ட  பாதிப்பு காரணமாக ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டுள்ளார் நடிகை ரைசா வில்சன். 

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாகப் புகழ்பெற்ற ரைசா வில்சன், பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். வேலையில்லா பட்டதாரி 2, தனுசு ராசி நேயர்களே, வர்மா போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ரைசா வில்சன் பகிர்ந்த புகைப்படத்தில் அவருடைய வலதுக் கன்னம் வீங்கியிருந்தது.  தவறான சிகிச்சையால் ஏற்பட்ட  பாதிப்பு என அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் தவறான சிகிச்சையால் ஏற்பட்ட  பாதிப்பு காரணமாக ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டுள்ளார் நடிகை ரைசா வில்சன். இதுதொடர்பாக மருத்துவர் பைரவில் செந்திலுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ரூ. 1 லட்சத்துக்கு 27 ஆயிரத்து ஐநூறு கட்டணம் செலுத்தி சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகு ரத்தக்கசிவு, வீக்கம் ஏற்பட்டதாக அவர் புகார் அளித்துள்ளார். 15 நாள்களுக்குள் ரூ. 1 கோடி தராவிட்டால் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வக்கீல் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே தங்கள் மருத்துவமனையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் ரைசா செயல்பட்டுள்ளார் என  தோல் மருத்துவர் பைரவி செந்தில் அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது: ரைசாவிடம் சிகிச்சைக்கான விளக்கம் தரப்பட்டு படிவத்தில் கையெழுத்து பெறப்பட்டது. இதற்கு முன்பு பலமுறை எவ்விதப் புகாரும் இல்லாமல் இதே சிகிச்சையை எங்களிடம் ரைசா மேற்கொண்டுள்ளார். ஏப்ரல் 16 அன்று அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் லேசான பின்விளைவுகள் ஏற்பட்டுள்ளன. 

முன்னெச்சரிக்கையுடன் இல்லாமலோ மருத்துவ அறிவுரைகளைப் பின்பற்றாமல் போனாலோ இதுபோல ஏற்படும். அந்தக் காயம் தானாகச் சரியாகிவிடும். இதனால் தோலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இத்தகவல்களை ரைசா நன்கு அறிவார். இருந்தும் தோல் சிகிச்சைக்காக மக்களிடம் பாராட்டுகள் பெற்று மதிப்புடன் உள்ள மருத்துவமனையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் அறிக்கையையும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். ரைசாவின் புகாரால் எனக்கும் மருத்துவமனைக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மன்னிப்பும் நஷ்ட ஈடும் கேட்டு ரைசா மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Nalam PasumaiyagamThalir Products
Thoothukudi Business Directory