» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம் : ஆட்சியர் அறிவிப்பு

வியாழன் 22, ஏப்ரல் 2021 3:09:28 PM (IST)



வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும்  வேட்பாளர்களின் முகவர்கள் அனைவருக்கும் கரோனா  பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது என தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஜி. எஸ். சமீரன் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  வாக்கு எண்ணிக்கை மையத்தில் வருகின்ற 02.05.2021-ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பொழுது வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் மேற்கொள்ளவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன்  தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில்மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன்  தெரிவித்ததாவது:- தென்காசி மாவட்டத்தில் அனைத்து சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையங்களும் கோவிட்-19 வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க போதுமான பரப்பளவைக் கொண்டுள்ளதால் ஏற்கனவே நடைபெற்ற தேர்தல்களில் பின்பற்றியது போல 14 மேஜைகளை கொண்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

தென்காசி மாவட்டத்தின் ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்கு எண்ணிக்கைக்கு தங்களால் நியமனம் செய்யப்படும் முகவர்கள் பட்டியலினை 23.04.2021 க்குள் ஒப்படைக்க வேண்டும். மேலும் கோவிட்-19 தடுப்பு முன்னெச்சரிக்கையாக 10மூ கூடுதல் முகவர்கள் பட்டியலினை தனியே ஒப்படைக்க வேண்டும்.கோவிட்-19 நோய்த் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்ளவிருக்கும் அனைத்து முகவர்களுக்கும் எதிர்வரும் 28.04.2021 அன்று கரோனா நோய்த் தொற்று பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அனைத்து முகவர்களும் தவறாது மேற்படி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜனனிசௌந்தர்யா, தேர்தல் வட்டாட்சியர் சண்முகம், அரசு அலுவலர்கள், காவல்துறையினர் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Thalir Products

Black Forest Cakes








Thoothukudi Business Directory