» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கரோனா தடுப்பூசி 2-வது டோஸ் போட்டுக் கொண்டார்!

வியாழன் 22, ஏப்ரல் 2021 12:43:39 PM (IST)சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று கரோனா தடுப்பூசியின் 2வது டோஸ் போட்டுக் கொண்டார்.

ஏற்கனவே, கரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக் கொண்ட மு.க. ஸ்டாலின், குறிப்பிட்ட கால இடைவெளியில், இன்று இரண்டாவது தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார். இது குறித்த புகைப்படத்தை தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் மு.க. ஸ்டாலின், இரண்டாவது டோஸ் கரோனா தடுப்பூசி இன்று எடுத்துக் கொண்டேன். 

இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனடியாக போட்டுக் கொள்ளவும். வேறு உடல் பாதிப்பு உள்ளவர்கள் எனில் தங்கள் மருத்துவரை கலந்தாலோசனை செய்துவிட்டு தடுப்பூசி எடுத்துக் கொள்ளவும்! நம்மையும் - நாட்டு மக்களையும் பாதுகாப்போம் என்று பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து

அவரு வாராருApr 23, 2021 - 08:16:39 AM | Posted IP 108.1*****

பாவம் காரு கூட இல்லாத ஏழை முதலமைச்சர் சுடலை

பொதுApr 22, 2021 - 02:19:29 PM | Posted IP 107.1*****

ethuku ipo pose

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest CakesNalam Pasumaiyagam


Thalir ProductsThoothukudi Business Directory