» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு : அரசியல் தலைவர்கள் இரங்கல்

வெள்ளி 26, பிப்ரவரி 2021 12:48:50 PM (IST)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார். அவருக்கு வயது 89.

ந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் நலக்குறைவு காரணமாக, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 2 தினங்களாக அனுமதிக்கப்பட்டிருந்தார் இந்நிலையில் நேற்று மாலை அவரது உடல்நிலை மோசமானது. இதையடுத்து டாக்டர்கள் செயற்கை சுவாச கருவி பொருத்தி தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். 

இந்நிலையில், இன்று (26ம் தேதி) காலை, தா.பாண்டியன் காலமானார். இதை மருத்துவமனை உறுதிப்படுத்தியுள்ளது. தா.பாண்டியன் தமிழகம் கண்ட மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர். கம்யூனிச சித்தாந்தங்களில் மாறாத பற்று கொண்டவர். 1989 முதல் 1996 வரை இருமுறை லோக்சபா உறுப்பினராக பதவி வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளராக 2005 முதல் 2015 வரை பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, தமிழகம் கண்ட மிகச்சிறந்த பொதுஉடமைவாதிகளில் ஒருவர் தா.பாண்டியன் என்று, அனைத்து கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Black Forest Cakes

Thalir ProductsThoothukudi Business Directory