» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தென்காசி பகுதியில் தொடர் திருட்டு ஒருவர் கைது - ரூ. 12 லட்சம் நகைகள் பறிமுதல்

வெள்ளி 26, பிப்ரவரி 2021 12:04:03 PM (IST)

தென்காசி பகுதிகளில் பல்வேறு வீடுகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூபாய் 12 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் 

தென்காசி மாவட்டம் தென்காசியில் அண்ணா நகர் 6 வது தெரு, அண்ணா நகர் 10 வது தெரு, மேசியா நகர், ஜமாலியா நகர், மற்றும்
பாவூர்சத்திரம், ஆலங்குளம், உள்ளிட்ட பல இடங்களில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர் திருட்டுகள் நடைபெற்று வந்தது. இதுபற்றி தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் தென்காசி மாவட்ட எஸ்பி சுகுணா சிங் உத்தரவின் பேரில் டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்ஐ மாரிமுத்து, ஏட்டுகள் கோபி, முத்தையா பாண்டியன், வடிவேல் முருகன், கருப்பசாமி, முருகன், அருள்ராஜ், முத்துக்குமார், கார்த்திக், ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் தென்காசியில் தனிப்படை போலீசார் ரோந்து சென்றபோது தென்காசி பகுதியில் சந்தேகத்தின்பேரில் நடமாடிய ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரது மகன் மனோஜ் (வயது 24) என்பதும், தென்காசி அண்ணா நகர் 6வது தெரு, அண்ணா நகர் 10வது தெரு, மேசியா நகர், ஜமாலியா நகர், மற்றும் பாவூர்சத்திரம் ஆலங்குளம் ஆகிய இடங்களில் இவரும் இவரது கூட்டாளியான திண்டுக்கல்லைச் சேர்ந்த சேகர் என்ற ராஜசேகர் என்பவரும் சேர்ந்து பல்வேறு வீடுகளை உடைத்து தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து தனிப்படையினர் அவரிடமிருந்து 350 கிராம் எடையுள்ள தங்க நகைகள், 200 கிராம் எடையுள்ள வெள்ளி பொருட்கள் உட்பட ரூபாய் 12.50 லட்சம் மதிப்பிலான பொருட்களை கைப்பற்றினார்கள். உடனடியாக மனோஜை கைது செய்த போலீசார் அவரது கூட்டாளியான திண்டுக்கல்லை சேர்ந்த சேகர்(எ) ராஜசேகரை வலைவீசி தேடி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Nalam Pasumaiyagam

Thalir ProductsBlack Forest CakesThoothukudi Business Directory