» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கூடங்குளம் அணுமின் நிலைய மேலாளர் தற்கொலை: திருமணம் நடைபெற இருந்த நிலையில் விபரீத முடிவு

வெள்ளி 26, பிப்ரவரி 2021 9:02:55 AM (IST)

கிருஷ்ணகிரி அருகே திருமணம் நடைபெற இருந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலைய மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள குந்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன். இவருடைய மகன் சிவராஜ் (29). இவர் கூடங்குளம் அணுமின் நிலைய பிளாண்ட் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது. இந்தநிலையில் சிவராஜ் திருமணம் செய்ய இருந்த பெண்ணின் வயது இன்னும் 18 நிறைவடையவில்லை.

எனவே இது அதிகாரிகளுக்கு தெரிந்தால் திருமணத்தை நிறுத்தி விடுவார்கள் என சிவராஜூக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசி மூலம் நேற்று முன்தினம் தெரிவித்தாராம். இதனால் செய்வது அறியாமல் திகைத்து போன சிவராஜ் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது தந்தை நாராயணன் கொடுத்த புகாரின்பேரில், குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிவராஜின் உடலை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் புதுமாப்பிள்ளையான கூடங்குளம் அணுமின் நிலைய மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட விபரீத சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

தமிழன்Feb 26, 2021 - 02:31:42 PM | Posted IP 162.1*****

யாருக்கும் தெரியாம பண்ணிட்டு போயிருக்கலாம். லூசு.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes

Thalir Products

Nalam Pasumaiyagam


Thoothukudi Business Directory