» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ராகுல் காந்தியிடமே நாராயணசாமி பொய் சொன்னார் : புதுச்சேரியில் மோடி பேச்சு!!

வியாழன் 25, பிப்ரவரி 2021 4:14:25 PM (IST)

புதுச்சேரிக்கு வருகை தந்த ராகுல் காந்தியிடமே, நாராயணசாமி பொய் சொன்னார் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

புதுச்சேரி ஜிப்மரில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பங்கேற்று பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர், லாஸ்பேட்டையில் பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மோடி பங்கேற்றுப் பேசினார். அப்போது,  புதுச்சேரி மக்கள் பங்கேற்கும் அரசு இங்கு தேவை. தற்போது புதுச்சேரியில் காற்று மாறி வீசி வருகிறது. எனவே, 2021-ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் சக்தியால் இயங்கும் அரசு புதுச்சேரியில் அமையும். 

காங்கிரஸ் மேலிட உத்தரவுப்படி இயங்கிய அரசு புதுச்சேரியில் அனைத்தையும் அழித்தது. புதுச்சேரியில் இருந்த காங்கிரஸ் அரசு மத்திய அரசுடன் ஒத்துழைக்கவில்லை. மத்திய அரசு கொடுத்த நிதியை பயன்படுத்தவில்லை. மோசமான காங்கிரஸ் அரசின் நிர்வாகத்திடமிருந்து புதுச்சேரி மக்கள் விடுதலை பெற்றுள்ளனர். நாட்டுக்கு உண்மையை சொல்வதற்கு பதில் நாராயணசாமி பொய் உரைத்தார்.

மழை, வெள்ளத்தின்போது வந்து பார்க்கவில்லை என்று மீனவ கிராமத்தைச் சேர்ந்த பெண் அளித்த புகாரையே ராகுலிடம் மாற்றிக் கூறியவர் நாராயணசாமி. மீனவப் பெண்மணி கூறிய குற்றச்சாட்டை, ராகுல் காந்திக்கு தவறாக மொழி பெயர்த்துக் கூறியவர் நாராயணசாமி.புதிய தொழில்கள் தொடங்குவதற்குத் தேவையான உதவிகளை செய்து வருகிறோம். குஜராத், காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. ஆனால் புதுச்சேரியில் நடைபெறவில்லை என்று பிரதமர் மோடி பேசினார்.


மக்கள் கருத்து

ஆசீர். விFeb 27, 2021 - 09:44:07 AM | Posted IP 108.1*****

அய்யா பொய்யே சொன்னது இல்ல. இந்த நாட்டில் அளவுக்கு அதிகமாக பொய் சொன்னதே ஜி தான். அமெரிக்கா அதிபருடன் தொலைபேசியில் பேசினேன் னு ஜி ஒரு ட்வீட் போட்டாரு. அப்படி யார்கிட்டேயும் நான் பேசலைன்னு பைடன் பதில் ட்வீட் போட்டு ஒட்டு மொத்த நாட்டோட மானத்தை வாங்கிட்டாரு. இவரு இன்னைக்கு பாடம் எடுக்காரு

போடா மோடிFeb 27, 2021 - 07:46:39 AM | Posted IP 108.1*****

அதை விடவா பெரிய பொய் ?? பீஜேபி ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை குறையும் உண்மையா ??

ToysFeb 26, 2021 - 01:05:08 AM | Posted IP 108.1*****

Unmai,appatinnaa enna? MR.BONDI

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest Cakes


Thalir Products


Nalam PasumaiyagamThoothukudi Business Directory