» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தைப்பூச திரு நாளுக்கு அரசு பொது விடுமுறை : தமிழக முதல்வர் அறிவிப்பு !
செவ்வாய் 5, ஜனவரி 2021 11:00:18 AM (IST)
ஜனவரி 28-ஆம் தேதி கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவுக்கு அரசு பொது விடுமுறை அறிவித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழ்க் கடவுளாகிய முருகப் பெருமானைச் சிறப்பித்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா. இவ்விழா தமிழ்நாட்டில் மட்டுமின்றி, கேரள மாநிலத்திலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களுக்கு நான் சுற்றுப்பயணம் சென்றபோது, இலங்கை மற்றும் மொரீஷியஸ் நாடுகளில் தைப்பூசத் திருவிழாவிற்கு பொது விடுமுறை அளிப்பது போன்று தமிழ்நாட்டிலும் தைப்பூசத் திருவிழாவிற்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர்.
இக்கோரிக்கையை பரிசீலித்து, வரும் ஜனவரி 28-ம் நாள் அன்று கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவை, பொது விடுமுறை நாளாக அறிவிக்கவும், இனிவரும் ஆண்டுகளிலும் தைப்பூசத் திருவிழா நாளை பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
karthickJan 5, 2021 - 05:02:58 PM | Posted IP 108.1*****
saravana.bavaa
kumarJan 5, 2021 - 11:29:29 AM | Posted IP 162.1*****
nandri...valga thamil...
மேலும் தொடரும் செய்திகள்

தபால் வாக்கு பெட்டிகளை மே 1ஆம் தேதி திறக்க கூடாது: அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:50:02 PM (IST)

தவறான சிகிச்சை காரணமாக ரூ. 1 கோடி இழப்பீடு கோரும் நடிகை ரைசா வில்சன்
வியாழன் 22, ஏப்ரல் 2021 3:30:46 PM (IST)

வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம் : ஆட்சியர் அறிவிப்பு
வியாழன் 22, ஏப்ரல் 2021 3:09:28 PM (IST)

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கரோனா தடுப்பூசி 2-வது டோஸ் போட்டுக் கொண்டார்!
வியாழன் 22, ஏப்ரல் 2021 12:43:39 PM (IST)

ஆக்ஸிஜன், வென்டிலேட்டர் பற்றாக்குறை உள்ளதா? தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவு
வியாழன் 22, ஏப்ரல் 2021 12:31:05 PM (IST)

தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு ஆக்சிஜன் ஏற்றுமதி - மத்திய அரசுக்கு தினகரன் கண்டனம்
வியாழன் 22, ஏப்ரல் 2021 12:13:35 PM (IST)

vetri vel ...veera vel....Jan 5, 2021 - 05:04:45 PM | Posted IP 173.2*****