» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குடும்பத் தகராறில் விஷம் குடித்த விவசாயி சாவு!
ஞாயிறு 24, மே 2026 2:00:56 PM (IST)
தூத்துக்குடி அருகே செட்டிஊரணி கிராமத்தில், மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் காரணமாக விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி தட்டப்பாறை அருகே செட்டிஊரணி, கீழத்தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் முத்துக்குமார் (45). விவசாயி, கடந்த மே 21-ஆம் தேதி முத்துக்குமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த முத்துக்குமார், வீட்டில் வைக்கப்பட்டிருந்த விவசாயத்திற்குப் பயன்படுத்தும் கடுமையான களைக்கொல்லி விஷ மருந்தை எடுத்து குடித்துள்ளார்.
அவர் விஷம் குடித்து மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை மீட்டு உடனடியாகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர் மீண்டும் இன்று அதிகாலை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அவசர அவசரமாகக் கொண்டு வந்துள்ளனர். ஆனால், வரும் வழியிலேயே முத்துக்குமாரின் உயிர் பிரிந்தது. இதுகுறித்துத் தட்டப்பாறை காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பணிக்கநாடார்குடியிருப்பு ஸ்ரீ கணேசர் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ஞாயிறு 24, மே 2026 8:38:47 PM (IST)

உரத்தின் விலையை பல மடங்கு உயர்ந்திய மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் முடிவு!
ஞாயிறு 24, மே 2026 8:36:21 PM (IST)

வீட்டின் வெளியே தூங்கிய பெண் பாம்பு கடித்துப் பரிதாப பலி! – தூத்துக்குடி அருகே பரிதாபம்!
ஞாயிறு 24, மே 2026 2:09:01 PM (IST)

தூய்மைப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு உடைகள், கையுறைகள் : மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்
ஞாயிறு 24, மே 2026 12:42:00 PM (IST)

தூத்துக்குடியில் 14 மணிநேர தொடர் மின்வெட்டு : பொதுமக்கள் கடும் அவதி!
ஞாயிறு 24, மே 2026 12:31:32 PM (IST)

தூத்துக்குடி டாஸ்மாக் குடோனில் அதிகாரிகள் அராஜகம்: சிஐடியு முற்றுகைப் போராட்ட எச்சரிக்கை!
ஞாயிறு 24, மே 2026 11:37:41 AM (IST)










