» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 14 மணிநேர தொடர் மின்வெட்டு : பொதுமக்கள் கடும் அவதி!

ஞாயிறு 24, மே 2026 12:31:32 PM (IST)

தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் பகுதியில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை சுமார் 14 மணிநேரம் நீடித்த தொடர் மின்வெட்டு காரணமாக அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட லூர்தம்மாள்புரம் பகுதியில் நேற்று (மே 23) சனிக்கிழமை மாலை 6:00 மணி அளவில் மின் தடை ஏற்பட்டுள்ளது. இந்த மின்வெட்டானது இரவு முழுவதும் நீடித்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8:00 மணிக்கு மேல் தான் மீண்டும் மின் விநியோகம் சீராகியுள்ளது.

கோடைகாலம் தீவிரமடைந்துள்ள நிலையில், இரவு முழுவதும் மின்சாரம் இல்லாததால் சிறுவர்கள், முதியவர்கள் எனப் பலரும் தூக்கமின்றி தவித்துள்ளனர். 14 மணிநேர தொடர் மின்வெட்டு காரணமாகப் அன்றாடப் பணிகளும், குடிநீர் விநியோகமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

முறையான முன்னறிவிப்பு ஏதுமின்றி, இவ்வளவு நீண்ட நேரம் மின்சாரத்தை முடக்கிய மின்வாரிய அதிகாரிகளின் செயல்பாட்டிற்குப் பொதுமக்கள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இனிவரும் காலங்களில் இது போன்ற நீண்ட நேர மின்வெட்டுகள் ஏற்படாத வண்ணம் மின்வாரிய உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என லூர்தம்மாள்புரம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory