» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி டாஸ்மாக் குடோனில் அதிகாரிகள் அராஜகம்: சிஐடியு முற்றுகைப் போராட்ட எச்சரிக்கை!

ஞாயிறு 24, மே 2026 11:37:41 AM (IST)

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் குடோனில் அதிகாரிகள் மதுபோதையில் சரக்கு ஏற்றி இறக்கும் சுமைத் தொழிலாளர்களை மிரட்டிப் பணியைப் பாதியிலேயே நிறுத்தியதாக சிஐடியு தொழிற்சங்கம் புகார் அளித்துள்ளது. 

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் கிடங்கில் நூற்றுக் கணக்கான சுமைத் தொழிலாளர்கள் நீண்ட நாட்களாக மதுபானப் பெட்டிகளை ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அங்குப் பணிபுரியும் குடோன் மேலாளர் மற்றும் இ.எஸ்.ஓ. உதவியாளர் ஆகியோர், தினசரி நூற்றுக்கணக்கான மதுபாட்டில்களை எவ்வித கணக்கும் இன்றிச் சட்டவிரோதமாக வெளியில் கடத்திச் சென்று விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

அதிகாரிகளின் இந்தத் தொடர் ஊழலைச் சுமைத் தொழிலாளர்கள் அண்மையில் தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அதிகாரிகள், தொழிலாளர்களைப் பழிவாங்கக் காத்திருந்தனர். இதன் உச்சக்கட்டமாக நேற்று காலை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இருவரும் பணி நேரத்திலேயே கடுமையான குடிபோதையில் கிடங்கிற்கு வந்துள்ளனர்.  வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்களைக் கடுமையான சொற்களால் ஏசி, மிரட்டல் விடுத்துப் பணியை வலுக்கட்டாயமாகப் பாதியிலேயே வெளியேற்றியதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து சிஐடியு மாவட்டத் தலைவர் பேச்சிமுத்து விடுத்துள்ள அறிக்கையில், "தமிழகத்தில் ஆட்சி மாறினாலும், அரசு அதிகாரிகளின் இத்தகைய லஞ்ச ஊழல் உள்கட்டமைப்புகள் இன்னும் மாறவில்லை என்பதற்கு இச்சம்பவமே அப்பட்டமான சான்றாகும். ஊழலைத் தட்டிக்கேட்ட எளிய தொழிலாளர்களை மிரட்டிய அதிகாரிகள் மீது டாஸ்மாக் மாவட்ட மேலாளரும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக குற்றவியல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவறும்பட்சத்தில், ஊழல் அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்ய வலியுறுத்திச் சிஐடியு சார்பில் டாஸ்மாக் மாவட்ட அலுவலகம் மற்றும் சிப்காட் கிடங்கு முன் தொழிலாளர்களைத் திரட்டிப் பிரம்மாண்ட முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும்," என எச்சரித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory