» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மக்களுக்குக் எனது கைகளால் விருந்து பரிமாறுவேன்! – அமைச்சர் ஆ. ஸ்ரீநாத் அறிக்கை

சனி 23, மே 2026 8:28:00 AM (IST)

தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஆ. ஸ்ரீநாத், தமது சொந்த மண்ணான தூத்துக்குடியில் உள்ள கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்குத் தனது கைகளால் நேரில் விருந்து பரிமாறி நன்றி செலுத்துவதற்கான சந்திப்பு நிகழ்ச்சி விரைவில் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் ஆ. ஸ்ரீநாத் விடுத்துள்ள உத்தியோகப்பூர்வ செய்திக் குறிப்பு விபரம்: "என் முன்னோர்கள் மற்றும் என் தந்தை வாழ்ந்த பூமி மட்டுமல்லாது, நான் பிறந்து வளர்ந்த இடமும் தூத்துக்குடிதான். இது முழுமையாக எனது சொந்த மண். அப்படிப்பட்ட வீர மண்ணிலிருந்து வந்த ஒரு எளிய தொண்டனை, இன்று மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையில் அமைச்சராக அமர வைத்துள்ளனர்.

இதற்காகத் தூத்துக்குடி மாவட்டப் பொதுமக்களுக்கும், எனக்காகத் தேர்தல் களத்தில் வீதி வீதியாகச் சென்று இரவு பகலாக உழைத்த தமிழக வெற்றிக் கழகத்தின் உன்னதத் தோழர்களுக்கும் நான் என்றென்றும் தார்மீகக் கடமைப்பட்டிருக்கிறேன். அமைச்சராகப் பொறுப்பேற்ற பின் முதன்முறையாகத் தனது சொந்த மாவட்டத்திற்கு வருகை தந்து அனைவரையும் நேரில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதை விளக்கிய அவர்,"தூத்துக்குடியில் உள்ள கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உள்கட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் முதலமைச்சரின் அன்பிற்குப் பாத்திரமான பொதுமக்கள் அனைவரையும் கூடிய விரைவில் நேரில் சந்திக்க உள்ளேன்.

தேர்தல் களத்தில் எனக்காக அயராது உழைத்த தூத்துக்குடி மக்களுக்கு என் சொந்தக் கையால் அன்போடு விருந்து பரிமாற என் மனது ஏங்கிக் கொண்டிருக்கிறது. எனவே, கூடிய விரைவில் தூத்துக்குடியில் அனைத்துத் தரப்பு மக்கள் மற்றும் கட்சியினரை ஒன்றிணைத்து ஒரு பெரும் 'சங்கம' சந்திப்பு நிகழ்வாக நாம் அனைவரும் ஒன்றுகூடுவோம் என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory