» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மனித உரிமைகள் குறித்த குறும்படப் போட்டி: ரூ.2 லட்சம் வரை பரிசு! - விண்ணப்பங்கள் வரவேற்பு!
திங்கள் 11, மே 2026 5:06:43 PM (IST)
தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) சார்பில் நடத்தப்படும் 2026-ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் குறித்த குறும்படப் போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
தேசிய மனித உரிமை ஆணையம் சார்பாக நடத்தப்படுகின்ற 2026 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் குறித்த குறும்பட போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், தகவல்
தேசிய மனித உரிமைகள் ஆணையம் மனித உரிமைகள் குறித்த போட்டியினை 2015 ஆம் ஆண்டு நிறுவி அதன் 12வது பதிப்பான 2026 ஆம் ஆண்டுக்கான குறும்பட போட்டிகளை நடத்துகிறது. இதற்கு நாட்டின் குடிமக்களாகிய எந்த வயதினரும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது. இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த குறும்படங்களுக்கு முதல் மூன்று பரிசுத்தொகை முறையே ரூ.2 இலட்சம், ரூ.1 இலட்சத்து 50 ஆயிரம் மற்றும் ரூ.1.00 இலட்சம் ஆகும்.
மேலும், ஆணைக்குழு மூன்று ரொக்க விருதுகள் சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளுடன் நடுவர் குழு பரிந்துரைத்தால் அதிகபட்சமாக (4) படங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசோடு சிறப்பு குறிப்பு சான்றிதழ் (Certificate of Special Mention) வழங்குவதற்கு ஆணையம் பரிசீலனை செய்யும்.
மேலும், குறும்படங்கள் எந்த இந்திய மொழிகளிலும், ஆங்கிலம் துணை தலைப்புகளுடன் இருக்கலாம். குறும்பட கால அளவு குறைந்த பட்சம் 3 நிமிடங்கள் அதிக பட்சம் 10 நிமிடங்களாக இருக்கலாம்.
பதிவுகளை அனுப்புவதற்கு கூகுள் டிரைவினை பயன்படுத்தி ஆன்லைனில் [email protected] இம்முகவரிக்கு அனுப்ப வேண்டிய கடைசி நாள் 30.06.2026. ஆகும். இப்போட்டி தொடர்பான விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் விண்ணப்ப படிவ நகல் NHRC இணையதளத்திலிருந்தோ (https://nhrc.nic.in) அல்லது பின்வரும் இணைப்பிலிருந்தோ (https://nhrc.nic.in/flipbook/files/255) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது இந்திய குடிமக்களை மையமாக கொண்ட மனித உரிமைகள், கலாச்சாரம் மற்றும் உணர்திறனை ஏற்படுத்தும் முயற்சிக்காக நடத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிராம மக்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்து சிசிடிவி கேமராவை உடைத்த ரவுடி : டிஎஸ்பியிடம் புகார்!
வெள்ளி 12, ஜூன் 2026 9:53:50 PM (IST)

கோவில்பட்டி பள்ளியில் குழந்தை தொழிலாளர்முறை எதிர்ப்பு தினம் அனுசரிப்பு
வெள்ளி 12, ஜூன் 2026 9:51:41 PM (IST)

ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு: 152 மனுக்களுக்கு உடனடித் தீர்வு!
வெள்ளி 12, ஜூன் 2026 9:43:21 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் வி.காந்திராஜ் ஆய்வு!
வெள்ளி 12, ஜூன் 2026 8:10:10 PM (IST)

சிஎஸ்ஆர் நிதியுடன் 1000 பண்ணைக்குட்டைகள் அமைக்கும் திட்டம்: விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு!
வெள்ளி 12, ஜூன் 2026 5:52:17 PM (IST)

தூத்துக்குடியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை வாகனங்களை டிஐஜி நேரில் ஆய்வு!
வெள்ளி 12, ஜூன் 2026 5:16:11 PM (IST)









