» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மது விற்பனையில் ஆதார், கைரேகை கட்டாயம் : புதிய முறையை அமல்படுத்தக் கோரிக்கை!
திங்கள் 11, மே 2026 4:02:10 PM (IST)
தமிழகத்தில் மதுப்பிரியர்களின் நலன் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி, மது விற்பனையில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கக் கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் பாலகிருஷ்ணன் மனு அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள மனுவில் "ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு இவ்வளவு மில்லி அளவுதான் மதுபானம் வழங்க வேண்டும் என்பதை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். மதுபானம் வாங்குபவர்களின் ஆதார் அடையாள அட்டை மற்றும் கைரேகையைப் பதிவு செய்த பின்னரே மது விநியோகம் செய்யப்பட வேண்டும்.
ஏற்கனவே மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்திற்காக (பாட்டிலுக்கு ₹10) நான்கு ஆண்டுகள் அறவழிப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றதைச் சுட்டிக்காட்டிய அவர், அதேபோல் ரேஷன் கடைகளில் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுவதைப் போன்ற முறையை மது விற்பனையிலும் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை- திருச்செந்தூர் இடையே ரயில் சேவையில் மாற்றம் : தென்னக ரயில்வே அறிவிப்பு
செவ்வாய் 9, ஜூன் 2026 8:37:25 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஊதிய வழக்கு: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜூன் 16-ல் தீர்ப்பு!
செவ்வாய் 9, ஜூன் 2026 8:32:07 PM (IST)

குற்றச் செயல்களில் தவெகவிற்குத் தொடர்பில்லை : தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் அறிக்கை!
செவ்வாய் 9, ஜூன் 2026 8:23:34 PM (IST)

ஆட்சி அதிகார மமதையில் பெண்களை மிரட்டுவதா? தவெக எம்எல்ஏவுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!
செவ்வாய் 9, ஜூன் 2026 5:39:23 PM (IST)

கோடைகாலத்திலும் தடையின்றி நிறைவான குடிநீர் விநியோகம்: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!
செவ்வாய் 9, ஜூன் 2026 4:48:12 PM (IST)

தூத்துக்குடி கால்டுவெல் பள்ளியில் ரூ.6 லட்சம் கல்வி உதவித்தொகை : முன்னாள் மாணவர்கள் வழங்கல்!
செவ்வாய் 9, ஜூன் 2026 4:30:21 PM (IST)









