» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இளைஞரைத் தாக்கிய வழக்கில் 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 6, மார்ச் 2026 5:34:10 PM (IST)
தூத்துக்குடியில் கடந்த 2011ஆம் ஆண்டில் இளைஞரைத் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தூத்துக்குடி காலங்கரை பகுதியைச் சேர்ந்த ஜெயபால் மகன் சபரி வாசகன் (21/2011)என்பவரை கடந்த 2011ஆம் ஆண்டு தாக்கி நகை பறித்த வழக்கில், ஜார்ஜ் ரோடு ஜோசப் சந்தியா மகன் பொவின்ராஜ் (20/2011), மினி சகாயபுரம் டோம்னிக் மகன் ஆக்னல் (21/2011), பாத்திமா நகர் அலாய்சியஸ் கோஸ்தா மகன் பென்கர் (23/2011), மற்றும் ஆஸ்வால்ட் மகன் இதழ் பட்டு (23/2011) ஆகிய 4 பேர் மீது சிப்காட் காவல் நிலையத்தில் அப்போதைய ஆய்வாளர் வீமராஜ் வழக்குப் பதிவு செய்தார்.
இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் (எண் 3) நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜய் ராஜ்குமார், குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் தலா 500 ரூபாய் அபராதம் விதித்து இன்று தீர்ப்பு அளித்தார். இவ்வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் கண்ணன் ஆஜராகி வாதாடினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மண், மானம், மொழியைக் காக்க மீண்டும் திமுக ஆட்சி: தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் பிரசாரம்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 7:54:45 PM (IST)

லாரி மீது கார் மோதல்: தம்பதி உட்பட 4 பேர் பலி : குழந்தைகள் படுகாயம்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:43:00 PM (IST)

பனையூரில் 10,000 ஆண்டுகால காலப் பெட்டகம் என திகழும் புதைபடிவங்கள்: தொல்லியல் ஆர்வலர் தகவல்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:12:54 PM (IST)

தூத்துக்குடியில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் – ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 4:26:58 PM (IST)

நாசரேத் மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் மனமகிழ்ச்சி விழா
திங்கள் 13, ஏப்ரல் 2026 4:20:23 PM (IST)

அம்பேத்கர் பிறந்தநாள்: ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் உறுதிமொழி ஏற்பு!
திங்கள் 13, ஏப்ரல் 2026 3:23:13 PM (IST)







