» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போக்சோ வழக்குகளில் தொடர்புடைய 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

வெள்ளி 20, பிப்ரவரி 2026 8:19:08 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட மூன்று குற்றவாளிகள் இன்று ஒரே நாளில் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் (குண்டர் சட்டம்) கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையம், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் குலசேகரன்பட்டினம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற போக்சோ வழக்குகளில், தூத்துக்குடியைச் சேர்ந்த முருகேசன் (59), இசக்கிராஜா (22) மற்றும் விருதுநகரைச் சேர்ந்த கோபால்சாமி (47) ஆகியோர் சம்பந்தப்பட்டிருந்தனர். 

இவர்கள் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டம் 1982-ன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதனைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். அதன்படி, சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மேற்கண்ட 3 நபர்களையும் இன்று தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த காவல்துறை எடுத்து வரும் தொடர் நடவடிக்கையின் பயனாக, இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 25 நபர்கள் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital

CSC Computer Education







Thoothukudi Business Directory