» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வனத்துறை சார்பில் சமையலறைத் தோட்டம் குறித்த பயிற்சி: 1000 மரக்கன்றுகள் வழங்கல்!

வெள்ளி 20, பிப்ரவரி 2026 8:01:13 PM (IST)



விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி மற்றும் அக்லூட் சிறப்புப் பள்ளியில், விளாத்திகுளம் வனச்சரக அலுவலகம் சார்பில் சமையலறைத் தோட்டம் அமைப்பது குறித்த வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி முகாம் நடைபெற்றது.

மாவட்ட வன அலுவலர் இளையராஜா அறிவுறுத்தலின்படி, விளாத்திகுளம் வனச்சரக அலுவலர் கனிமொழி அரசு தலைமையில் இப்பயிற்சி நடைபெற்றது. விளாத்திகுளம் வனவர் பாண்டியராஜ் மற்றும் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த முகாமில் மாணவ-மாணவிகளுக்கு கத்திரிக்காய், அவரைக்காய், வெண்டைக்காய் மற்றும் தக்காளி உள்ளிட்ட காய்கறி விதைகளை நடவு செய்யும் முறை, செடிகளை இயற்கை முறையில் பராமரித்து, ரசாயனமற்ற காய்கறிகளை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டன. ஆரோக்கியமான உணவுப் பழக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை வளர்ப்பின் அவசியம் குறித்து மாணவர்களிடையே கலந்துரையாடப்பட்டது.

பயிற்சியின் நிறைவில் பங்கேற்ற 270 மாணவ-மாணவிகளுக்குப் பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், பசுமையை ஊக்குவிக்கும் வகையில் 1000 மரக்கன்றுகள் வழங்கப்பட்டு, அவற்றை நட்டுப் பராமரிப்பது குறித்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியானது பள்ளி மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுய உணவு உற்பத்தி குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education

Arputham Hospital








Thoothukudi Business Directory