» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குழந்தைகளுக்கு விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்: ஆட்சியர் சுகுமார் தகவல்
வெள்ளி 20, பிப்ரவரி 2026 5:57:24 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் பிப்ரவரி 23 முதல் குழந்தைகளுக்கு விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், தேசிய விட்டமின் ஏ சத்துக் குறைபாடு நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.சுகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் வரும் 23.02.2026 முதல் 28.02.2026 வரை இந்த முகாம் நடைபெறும். இத்திட்டத்தின் கீழ் 6 மாதம் முதல் 60 மாதம் வரை உள்ள சுமார் 1,07,537 குழந்தைகளுக்கு விட்டமின் ஏ திரவம் வழங்கப்பட உள்ளது.
குழந்தைகளின் உடல், மன வளர்ச்சி மற்றும் புத்தி கூர்மைக்கு இந்த நுண்சத்து இன்றியமையாதது. கண் ஆரோக்கியம்: கண் குருடு ஏற்படாமல் தடுக்க இது அவசியம். குடல், சிறுநீர், சுவாசப் பாதைகள் மற்றும் தோல் போன்ற உறுப்புகளைத் தொற்றிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இந்த திரவத்தால் எந்தப் பக்க விளைவுகளும் ஏற்படாது.
அனைத்து துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் 6 முதல் 11 மாத குழந்தைகளுக்கு 1 மில்லி, 12 முதல் 60 மாத குழந்தைகளுக்கு 2 மில்லி. அளவில் திரவம் வழங்கப்படும், பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்கள் குழந்தைகளுக்கு விட்டமின் ஏ திரவம் வழங்கிப் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போக்சோ வழக்குகளில் தொடர்புடைய 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 8:19:08 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு
வெள்ளி 20, பிப்ரவரி 2026 8:16:16 PM (IST)

வனத்துறை சார்பில் சமையலறைத் தோட்டம் குறித்த பயிற்சி: 1000 மரக்கன்றுகள் வழங்கல்!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 8:01:13 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா: சிறப்புச் சொற்பொழிவு!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 5:25:21 PM (IST)

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான சிறப்பு வாழ்வாதாரத் திட்ட டிஜிட்டல் தளம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 4:36:05 PM (IST)

தூத்துக்குடியில் தேர்தல் ஆயத்த பணிகள் தீவிரம் : ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 3:38:34 PM (IST)










