» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா: சிறப்புச் சொற்பொழிவு!

வெள்ளி 20, பிப்ரவரி 2026 5:25:21 PM (IST)



தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் தமிழ்த்துறை முத்தமிழ் மன்றம் சார்பாக, உலகத் தாய்மொழி நாள் விழா இன்று நடைபெற்றது..

கல்லூரி முதல்வர் சொ. வீரபாகு இவ்விழாவிற்குத் தலைமை தாங்கினார். தமிழ்த்துறைத் தலைவரும் இணைப்பேராசிரியருமான செ.சாந்தி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இவ்விழாவில் ஆசிரியரும், எழுத்தாளரும், ‘தமிழ்ச்செம்மல்’ விருது பெற்றவருமான நெய்தல் அண்டோ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, "தமிழ் வளர்த்த தூத்துக்குடி" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அவரது உரையில் உலகில் அழிந்துபோன மொழிகள் குறித்தும், தொன்மையான தமிழ்மொழியின் தனிச்சிறப்புகள் குறித்தும் விளக்கினார். தமிழில் முதன்முதலில் அச்சிடப்பட்ட நூலான ‘தம்பிரான் வணக்கம்’ மற்றும் புன்னைக்காயலில் அச்சு வடிவம் கண்ட ‘அடியார் வரலாறு’ உள்ளிட்ட அரிய நூல்களைக் காணொளி வாயிலாக மாணவர்களுக்குக் காட்சிப்படுத்தி அதன் வரலாற்றுப் பின்னணியை விளக்கினார்.

விழாவின் ஒரு பகுதியாக, தாய்மொழியின் முக்கியத்துவத்தைப் போற்றும் வகையில் உலகத் தாய்மொழி தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் பேராசிரியர்கள் அ.அமுதா, தெ. சந்திரா, க.சிரஞ்சீவி, பொன். கனகா, சி.ஜாக்ஸன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். விழாவின் நிறைவாகப் பேராசிரியை தெ.சந்திரா நன்றி கூற, பேராசிரியை பொன். கனகா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital







Thoothukudi Business Directory