» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காற்றாலை நிறுவனங்களுக்காக சோலார் விளக்கு, மரத்தை அகற்றக் கூடாது: பொதுமக்கள் கோரிக்கை!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 12:06:13 PM (IST)
பொட்டலூரணி விலக்கு பேருந்து நிறுத்தத்தில் உள்ள சோலார் மின் விளக்கு மற்றும் அரச மரத்தை அகற்றக் கூடாது என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி, செக்காரக்குடி, அழகாபுரி உள்ளிட்ட பல கிராம மக்கள் இந்தப் பேருந்து நிறுத்தத்தையே சார்ந்துள்ளனர். இப்பகுதியில் காற்றாலை இறக்கைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, நெடுஞ்சாலைத் துறை அனுமதியுடன் சோலார் விளக்கு மற்றும் மரத்தை அகற்ற முயற்சிகள் நடப்பதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே சாலை மறியல் போராட்டத்தின் போது கோட்டாட்சியர் அளித்த உறுதிமொழியின்படி இந்தச் சோலார் விளக்கு அமைக்கப்பட்டது. ஆனால், ஆறு மாதங்கள் ஆகியும் இன்னும் உயர் கோபுர மின் விளக்கு அமைத்துத் தரப்படவில்லை. போராடிப் பெற்ற சோலார் விளக்கையும், நிழல் தரும் மரத்தையும் அகற்ற அனுமதி அளிக்கக் கூடாது.
நிழல் தரும் மரத்தையும், இந்த விளக்கையும் மக்கள் தெய்வமாகவே கருதி வருகின்றனர். பொதுமக்களின் உணர்வுகளுக்கு எதிராக இவற்றை அகற்ற அரசு அனுமதி அளிக்கக் கூடாது, என மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது என்று போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சங்கரநாராயணன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போக்சோ வழக்குகளில் தொடர்புடைய 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 8:19:08 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு
வெள்ளி 20, பிப்ரவரி 2026 8:16:16 PM (IST)

வனத்துறை சார்பில் சமையலறைத் தோட்டம் குறித்த பயிற்சி: 1000 மரக்கன்றுகள் வழங்கல்!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 8:01:13 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா: சிறப்புச் சொற்பொழிவு!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 5:25:21 PM (IST)

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான சிறப்பு வாழ்வாதாரத் திட்ட டிஜிட்டல் தளம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 4:36:05 PM (IST)

தூத்துக்குடியில் தேர்தல் ஆயத்த பணிகள் தீவிரம் : ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 3:38:34 PM (IST)










