» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திமுக - காங்கிரஸ் கூட்டணி நிலைத்திருக்கும்: தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி பேட்டி

வெள்ளி 20, பிப்ரவரி 2026 11:55:33 AM (IST)

திமுக - காங்கிரஸ் கூட்டணி பல ஆண்டுகளாகப் பலமாக நிலைத்திருக்கக்கூடிய ஒரு கூட்டணி என்று கனிமொழி எம்பி கூறினார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது "இடைக்கால பட்ஜெட்டில் எதிர்காலத் திட்டங்கள் எதுவுமில்லை எனக் கூறி பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்:

"பொதுவாக இடைக்கால பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் இடம்பெறுவதில்லை. ஆனால், இந்த பட்ஜெட்டை அவர் முழுமையாகப் படித்துப் பார்த்தால் இளைஞர்களுக்கும், விளையாட்டுத் துறைக்கும் தேவையான பல முக்கியமான எதிர்காலத் திட்டங்கள் இருப்பதை அறியலாம். எதற்காவது ஒரு காரணத்திற்காக வெளிநடப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கில் அவர் நடத்தும் அரசியல் நாடகம் சரியானது அல்ல."

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக பாஜக கூறி வருவது குறித்த கேள்விக்கு, "பாஜக தனது கூட்டணியைச் சரியாக வைத்துக் கொண்டாலே போதும்; அவர்கள் ஏன் மற்ற கூட்டணிகளைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள் எனத் தெரியவில்லை. திமுக - காங்கிரஸ் கூட்டணி பல ஆண்டுகளாகப் பலமாக நிலைத்திருக்கக்கூடிய ஒரு கூட்டணி. இதில் எந்தவித மாற்றமும் வருவதற்கு வாய்ப்பே இல்லை."

மாநில சுயாட்சி குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த கனிமொழி எம்.பி: "மாநில உரிமைகளை டெல்லியில் கொண்டு போய் அடகு வைத்தவர்தான் எதிர்க்கட்சித் தலைவர். 'மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி' என்பதே திமுகவின் அடிப்படைக் கொள்கை. இது ஒருவேளை அவருக்குத் தெரியாமல் இருக்கலாம்," என்று விமர்சித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education





Arputham Hospital




Thoothukudi Business Directory