» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பைக் விபத்து: வாலிபர் பரிதாப சாவு

வெள்ளி 20, பிப்ரவரி 2026 11:28:10 AM (IST)

தூத்துக்குடியில் மோட்டார் பைக் மீது லாரி மோதிய விபத்தில், வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி இனிகோ நகரைச் சேர்ந்தவர் பிச்சையா மகன் டிராவின் (25). கடல் தொழில் செய்து வந்த இவர், நேற்று இரவு முத்தையாபுரத்திலிருந்து தூத்துக்குடி நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். முத்தையாபுரம் வடக்குத் தெருவில் வந்து கொண்டிருந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது டிராவினின் பைக் எதிர்பாராத விதமாக மோதியது. 

இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று டிராவினின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இவ்விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital



CSC Computer Education






Thoothukudi Business Directory