» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குடும்பத் தகராறில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்!
வியாழன் 19, பிப்ரவரி 2026 4:49:08 PM (IST)
தூத்துக்குடியில் கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில், மனமுடைந்த பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி ஜாகீர் உசேன் நகரைச் சேர்ந்தவர் முகமது ஷேக். இவரது மனைவி சகீரா பேகம் (40). இந்தத் தம்பதியினருக்குக் குழந்தைகள் இல்லை எனத் தெரிகிறது. நேற்று இரவு சகீரா பேகம் தனது கணவருக்கு குக்கரில் சாதம் சமைத்து வைத்துள்ளார். ஆனால், தனக்கு குக்கர் சாதம் பிடிக்காது என்று முகமது ஷேக் கூறியதாகத் தெரிகிறது. இது தொடர்பாக கணவன் - மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக் கொண்ட முகமது ஷேக், அருகில் உள்ள தனது தாயார் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
கணவர் கோபித்துச் சென்றதால் மிகுந்த மனவேதனை அடைந்த சகீரா பேகம், வாழ்க்கையில் வெறுப்படைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாளமுத்து நகர் காவல் நிலைய போலீசார், சகீரா பேகத்தின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போக்சோ வழக்குகளில் தொடர்புடைய 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 8:19:08 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு
வெள்ளி 20, பிப்ரவரி 2026 8:16:16 PM (IST)

வனத்துறை சார்பில் சமையலறைத் தோட்டம் குறித்த பயிற்சி: 1000 மரக்கன்றுகள் வழங்கல்!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 8:01:13 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா: சிறப்புச் சொற்பொழிவு!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 5:25:21 PM (IST)

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான சிறப்பு வாழ்வாதாரத் திட்ட டிஜிட்டல் தளம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 4:36:05 PM (IST)

தூத்துக்குடியில் தேர்தல் ஆயத்த பணிகள் தீவிரம் : ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 3:38:34 PM (IST)










