» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மரத்திலிருந்து விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
வியாழன் 19, பிப்ரவரி 2026 4:43:03 PM (IST)
தூத்துக்குடியில் மரத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி சிலுவைபட்டி, ஆனந்த் நகரைச் சேர்ந்தவர் வேலு மகன் அரிகிருஷ்ணன் (50). கடல் தொழிலாளியான இவர், கடந்த 8-ம் தேதி தனது வீட்டின் அருகிலிருந்த கொடுக்காப்புளி மரத்தில் ஏறி பழம் பறித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்ததில், அரிகிருஷ்ணனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அரிகிருஷ்ணன், நேற்று இரவு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தாளமுத்து நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போக்சோ வழக்குகளில் தொடர்புடைய 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 8:19:08 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு
வெள்ளி 20, பிப்ரவரி 2026 8:16:16 PM (IST)

வனத்துறை சார்பில் சமையலறைத் தோட்டம் குறித்த பயிற்சி: 1000 மரக்கன்றுகள் வழங்கல்!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 8:01:13 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா: சிறப்புச் சொற்பொழிவு!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 5:25:21 PM (IST)

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான சிறப்பு வாழ்வாதாரத் திட்ட டிஜிட்டல் தளம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 4:36:05 PM (IST)

தூத்துக்குடியில் தேர்தல் ஆயத்த பணிகள் தீவிரம் : ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 3:38:34 PM (IST)










