» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட ஜாமியா பள்ளிவாசல் திறப்பு: ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு
வியாழன் 19, பிப்ரவரி 2026 12:53:52 PM (IST)

தூத்துக்குடியில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த மற்றும் பாரம்பரியமிக்க ஜாமியா பள்ளிவாசல், வெளிநாடுகளில் உள்ள பள்ளிவாசல்களுக்கு இணையான கலைநயத்துடன் புதுப்பிக்கப்பட்டு நேற்று (புதன்கிழமை) மாலை வெகு சிறப்பாகத் திறந்து வைக்கப்பட்டது.
தூத்துக்குடியில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த மற்றும் பாரம்பரியமிக்க ஜாமியா பள்ளிவாசலை நவீன வசதிகளுடன் புதுப்பிக்க அதன் ஜமாத்தார்கள் எடுத்த முடிவின்படி, 'மராமத் பணிக்குழு' அமைக்கப்பட்டது. இஸ்லாமிய பெருமக்களின் தாராளமான நன்கொடைகள் மற்றும் அந்தப் பணிக்குழுவின் ஆலோசனையின் அடிப்படையில், இப்பள்ளிவாசல் மிகப்பிரம்மாண்டமாகப் புதுப்பிக்கப்பட்டது.
பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் அழிம் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழாவில் இமாம் சதக்கத்துல்லா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தலைமை இமாம் அப்துல் கலாம் சதக்கப்பல் துவா ஓத, பள்ளிவாசல் முன்னாள் தலைவர் மீராசா மற்றும் மன்பவுஸ்லாஹ் அரபிக் கல்லூரி முதல்வர் இம்தாதுல்லாஹ் ஆகியோர் புதுப்பிக்கப்பட்ட மிம்பர் மிஹ்ராவினை முறைப்படி திறந்து வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து சிறப்புத் தொழுகை மற்றும் மோதிய முகமது பைஜான் அவர்களின் கிராத் பாராயணம் நடைபெற்றது. மிம்பர் மிஹ்ராவினைச் சிறப்பாக வடிவமைத்த கட்டிடக் கலைஞர்களுக்கு, பானு பிரிண்டர்ஸ் உரிமையாளர் காஜி மைதீன் அப்துல் காதர் (எ) கனி அவர்கள் பரிசு வழங்கிப் பாராட்டினார்.

நெல்லை வக்ஃப் வாரிய அலுவலக சூப்பிரண்டு காலித், காஜிகள் மற்றும் ஜமாத் முக்கியஸ்தர்களான முகமது ரஃபீக், நஜ்முத்தீன், முகமது உவைஸ், முகமது சலீம் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் பேராசிரியர்கள், பல்வேறு பள்ளிவாசல்களின் இமாம்கள், ஜாமியா பள்ளிவாசல் ஜமாத்தார்கள் மற்றும் தூத்துக்குடி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான இஸ்லாமியப் பெருமக்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போக்சோ வழக்குகளில் தொடர்புடைய 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 8:19:08 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு
வெள்ளி 20, பிப்ரவரி 2026 8:16:16 PM (IST)

வனத்துறை சார்பில் சமையலறைத் தோட்டம் குறித்த பயிற்சி: 1000 மரக்கன்றுகள் வழங்கல்!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 8:01:13 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா: சிறப்புச் சொற்பொழிவு!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 5:25:21 PM (IST)

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான சிறப்பு வாழ்வாதாரத் திட்ட டிஜிட்டல் தளம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 4:36:05 PM (IST)

தூத்துக்குடியில் தேர்தல் ஆயத்த பணிகள் தீவிரம் : ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 3:38:34 PM (IST)










