» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வருவாய் கிராம ஊழியர்கள் வேலைநிறுத்தம்: 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தல்!
வியாழன் 19, பிப்ரவரி 2026 11:44:26 AM (IST)

வரையறுக்கப்பட்ட காலம் வரை ஊதியம் உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் வருவாய் கிராம ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தம் மற்றும் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் (TNRVEA) சார்பில், மூன்று முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் இன்று (19.02.2026) முதல் தொடர் வேலைநிறுத்தம் மற்றும் காத்திருப்பு போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.
வரையறுக்கப்பட்ட காலம் வரை ஊதியம் வழங்க வேண்டும், TAPS பென்ஷன் திட்டத்தில் கிராம உதவியாளர்களையும் சேர்த்து அரசாணை வழங்க வேண்டும், கிராம உதவியாளர்களின் வாரிசுகளுக்குக் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கும்போது, கல்வித் தகுதியின் அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தக் காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது.
போராட்டத்திற்கு வட்டத் தலைவர் அருண்குமார் தலைமை தாங்கினார். வட்டச் செயலாளர் ராஜேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார். போராட்டத்தின் நோக்கம் மற்றும் கோரிக்கைகள் குறித்து மாவட்டத் தலைவர் குமாரலிங்கம் மற்றும் மாவட்டச் செயலாளர் கார்த்திக் ஆகியோர் விளக்கவுரை ஆற்றினர். இறுதியாக வட்டப் பொருளாளர் ஹசீனா கஜிதா பானு நன்றியுரை வழங்கினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போக்சோ வழக்குகளில் தொடர்புடைய 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 8:19:08 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு
வெள்ளி 20, பிப்ரவரி 2026 8:16:16 PM (IST)

வனத்துறை சார்பில் சமையலறைத் தோட்டம் குறித்த பயிற்சி: 1000 மரக்கன்றுகள் வழங்கல்!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 8:01:13 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா: சிறப்புச் சொற்பொழிவு!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 5:25:21 PM (IST)

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான சிறப்பு வாழ்வாதாரத் திட்ட டிஜிட்டல் தளம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 4:36:05 PM (IST)

தூத்துக்குடியில் தேர்தல் ஆயத்த பணிகள் தீவிரம் : ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 3:38:34 PM (IST)










