» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இளம்பெண்ணைக் கத்தியால் குத்திய வியாபாரி விஷம் குடித்து தற்கொலை!
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:25:59 AM (IST)
கயத்தாறில் இளம்பெண் ஒருவரைச் சரமாரியாகக் கத்தியால் குத்திவிட்டு, விஷம் குடித்த வியாபாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு கோட்டை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் இசக்கி ராஜா (27). இவரது மனைவி இசக்கியம்மாள் (26) நேற்று முன்தினம் வீட்டில் மாவு அரைத்துக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் மணியாச்சியைச் சேர்ந்த போலி வியாபாரி மகாராஜன் (50) என்பவர், திடீரென வீட்டிற்குள் புகுந்து இசக்கியம்மாளைக் கத்தியால் சரமாரியாகக் குத்தினார்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால், மகாராஜன் அங்கிருந்து தப்பிச் சென்று தனது வீட்டில் பூச்சி மருந்து குடித்து மயங்கிக் கிடந்தார். காயமடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகாராஜன் நேற்று மாலை உயிரிழந்தார். இது குறித்து கயத்தாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போக்சோ வழக்குகளில் தொடர்புடைய 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 8:19:08 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு
வெள்ளி 20, பிப்ரவரி 2026 8:16:16 PM (IST)

வனத்துறை சார்பில் சமையலறைத் தோட்டம் குறித்த பயிற்சி: 1000 மரக்கன்றுகள் வழங்கல்!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 8:01:13 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா: சிறப்புச் சொற்பொழிவு!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 5:25:21 PM (IST)

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான சிறப்பு வாழ்வாதாரத் திட்ட டிஜிட்டல் தளம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 4:36:05 PM (IST)

தூத்துக்குடியில் தேர்தல் ஆயத்த பணிகள் தீவிரம் : ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 3:38:34 PM (IST)











மனிதன்Feb 20, 2026 - 08:19:30 AM | Posted IP 104.2*****