» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
புதிய வருவாய் அலுவலகத்தை திறக்க நடவடிக்கை : தமாகா இளைஞர் அணி கோரிக்கை!
புதன் 18, பிப்ரவரி 2026 4:23:08 PM (IST)

கடலையூரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகக் கட்டிடத்தை உடனடியாகத் திறந்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் எனத் தமிழ் மாநில காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் தாலுகாவில் உள்ள கடலையூர் கிராமத்தைச் சுற்றி ஏராளமான குக்கிராமங்கள் அமைந்துள்ளன. இந்தப் பகுதி மக்களின் வருவாய்த் துறை சார்ந்த தேவைகளுக்காக, வருவாய் ஆய்வாளர் அலுவலகம் கடலையூரிலேயே இயங்கி வருகிறது.
கடலையூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்காகப் புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டு, தற்போது பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்துள்ளன. கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுப் பல மாதங்கள் கடந்த நிலையிலும், இதுவரை அது திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் வருவாய் ஆய்வாளர் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் போதிய இடவசதியின்றி செயல்படும் சூழல் நிலவுகிறது. மேலும், பல்வேறு சான்றிதழ்கள் மற்றும் தேவைகளுக்காக அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இது குறித்துத் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணித் தலைவர் கடலையூர் எஸ்.ஏ. கனி விடுத்துள்ள கோரிக்கையில்:"கட்டி முடிக்கப்பட்டுப் பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் இருக்கும் கடலையூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகக் கட்டிடத்தைத் தமிழக அரசு உடனடியாகத் திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க வேண்டும். இதன் மூலம் கடலையூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல கிராம மக்கள் விரைவான சேவைகளைப் பெற வழிவகை செய்ய வேண்டும்," என வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தாமிரபரணி நதிக்கரை கொலைகளின் கூடாரம் : திமுக அரசு மீது நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு
வெள்ளி 6, மார்ச் 2026 8:57:36 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்!
வெள்ளி 6, மார்ச் 2026 8:39:00 PM (IST)

இளைஞரைத் தாக்கிய வழக்கில் 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 6, மார்ச் 2026 5:34:10 PM (IST)

தூத்துக்குடியில் சாரண, சாரணியர் சிந்தனை நாள் விழா: 15 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
வெள்ளி 6, மார்ச் 2026 5:06:07 PM (IST)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கித் தேர்வில் வெற்றி பெற கல்லூரி மாணவர்கள் சிறப்புப் பிரார்த்தனை!
வெள்ளி 6, மார்ச் 2026 4:43:53 PM (IST)

தூத்துக்குடியில் அங்கன்வாடி கட்டிடம் இடிந்து விபத்து; அதிகாரிகளின் அலட்சியம்: பாஜக கண்டனம்
வெள்ளி 6, மார்ச் 2026 4:30:10 PM (IST)









