» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஷஃபான் பிறை: பிப்.3ல் பராஅத் இரவு அனுசரிப்பு!

செவ்வாய் 20, ஜனவரி 2026 3:13:07 PM (IST)

தமிழகத்தில் பிப்.3ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) பரக்கத்துகள் நிறைந்த பராஅத் இரவு அனுசரிக்கப்படுவதாக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ளன. 

தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று (19-01-2026, திங்கட்கிழமை) ஹிஜ்ரீ 1447 ஷஃபான் மாத பிறை தென்படவில்லை. இதனால் ரஜப் மாதம் 30 நாள்களாக பூர்த்தி செய்யப்படுவதாகவும், வருகிற 21-01-2026 புதன்கிழமை ஷஃபான் பிறை 1 தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 03-02-2026 செவ்வாய்க்கிழமை மாலை பின்னேரம் (ஷஃபான் பிறை 15) பரக்கத்துகள் நிறைந்த பராஅத் இரவு அனுசரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 04-02-2026 புதன்கிழமை நிஸ்ஃபு ஷஃபான் தினமாகும் என்றும், அன்றைய தினம் சுன்னத்தான நோன்பு நோற்கும் நாள் எனவும் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் ஜமாஅத்தினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education




Arputham Hospital





Thoothukudi Business Directory