» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் நிலை தடுமாறி விழுந்ததில் துறைமுக தொழிலாளர் பரிதாப சாவு

புதன் 10, டிசம்பர் 2025 10:54:35 AM (IST)

தூத்துக்குடி அருகே பைக் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தூத்துக்குடி துறைமுக தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆவரைகுளம் கிராமம் காலனி தெருவில் வசிப்பவர் முனியசாமி. இவரது மகன் லிங்கராஜ் (27). இவர் தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். ஓட்டப்பிடாரத்திலிருந்து ஓசனத்து செல்லும் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
 
இந்த சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் செந்தில் ஆறுமுகம் சம்பவ இடத்திற்கு சென்று இவரது பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory