» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் தெரு நாய்கள் கடித்து மக்கள் பாதிப்பு : மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
புதன் 10, டிசம்பர் 2025 10:00:34 AM (IST)

தூத்துக்குடி மாநகரப்பகுதியில் அதிகரித்து வரும் நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். நாய்களை பிடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாநகரப்பகுதியில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது, இதனால் பொதுமக்களுக்கு, குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு நாய் கடிப்பால் ஏற்படும் அச்சமும், மருத்துவமனைகளில் ரேபிஸ் தடுப்பூசிக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தூத்துக்குடி பேருந்து நிலையம், மார்க்கெட், கோவில் வளாகங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் என எல்லா இடங்களிலும் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன, இதனால் மக்கள் வெளியில் செல்ல அஞ்சுகின்றனர்.
தூத்துக்குடி மேல சண்முகபுரம், கீழ சண்முகபுரம் உள்ளிட்ட மாநகரின் அனைத்து வார்டுகளிலும் அதிக நாய்கள் தொல்லை இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மட்டும் ஒரே வாரத்தில் 80க்கும் மேற்பட்டோர் தடுப்பூ ஊசி போட்டுள்ளதாகவும், தூத்துக்குடி மாநகர் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம்: தமிழக வெற்றிக் கழகம் ஆதரவு
செவ்வாய் 20, ஜனவரி 2026 8:54:04 PM (IST)

தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு : தாயிடம் போலீசார் விசாரணை
செவ்வாய் 20, ஜனவரி 2026 8:11:52 PM (IST)

வனங்களை உருவாக்க கல்லூரி மாணவர்கள் உறுதியேற்பு
செவ்வாய் 20, ஜனவரி 2026 5:12:35 PM (IST)

தூத்துக்குடியில் ஜன.21ல் மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
செவ்வாய் 20, ஜனவரி 2026 4:56:45 PM (IST)

சகிப்பின்மைக்கு இடமில்லை: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கனிமொழி எம்.பி. ஆதரவு!
செவ்வாய் 20, ஜனவரி 2026 4:11:07 PM (IST)

ஷஃபான் பிறை: பிப்.3ல் பராஅத் இரவு அனுசரிப்பு!
செவ்வாய் 20, ஜனவரி 2026 3:13:07 PM (IST)








