» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோயிலில் மார்கழி மாதம் பூஜைகள் : அதிகாலை 3 மணிக்கு நடை திறப்பு!
புதன் 10, டிசம்பர் 2025 8:39:31 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், மார்கழி மாதம் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெறும்.
இதுகுறித்து கோயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மார்கழி மாதம் டிச. 16இல் தொடங்கி ஜன. 14இல் நிறைவடைகிறது. இம்மாதத்தில் திருச்செந்தூர் கோயில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து, 3.30-க்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 4.45 - 5 மணிக்குள் உதயமார்த்தாண்ட தீபாராதனை, 5 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, 6 - 7 மணிக்குள் காலசந்தி தீபாராதனை, 7.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், 8.45 - 9 மணிக்குள் உச்சிகால தீபாராதனை நடைபெறும்
பிற்பகல் 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், இரவு 7 மணிக்கு ராக்கால தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8 - 8.30 மணிக்குள் பள்ளியறை தீபாராதனை நடைபெற்று நடை திருக்காப்பிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலப் புத்தாண்டு
ஆங்கிலப் புத்தாண்டு தினமான ஜன. 1ஆம் தேதி அதிகாலை ஒரு மணிக்கும், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஜன. 3ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கும் நடை திறக்கப்பட்டு மற்ற கால பூஜைகள் நடைபெறும். பிரதோஷமான டிச. 17, ஜன. 1 ஆகிய 2 நாள்கள் பிற்பகல் 2.30 மணிக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம்: தமிழக வெற்றிக் கழகம் ஆதரவு
செவ்வாய் 20, ஜனவரி 2026 8:54:04 PM (IST)

தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு : தாயிடம் போலீசார் விசாரணை
செவ்வாய் 20, ஜனவரி 2026 8:11:52 PM (IST)

வனங்களை உருவாக்க கல்லூரி மாணவர்கள் உறுதியேற்பு
செவ்வாய் 20, ஜனவரி 2026 5:12:35 PM (IST)

தூத்துக்குடியில் ஜன.21ல் மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
செவ்வாய் 20, ஜனவரி 2026 4:56:45 PM (IST)

சகிப்பின்மைக்கு இடமில்லை: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கனிமொழி எம்.பி. ஆதரவு!
செவ்வாய் 20, ஜனவரி 2026 4:11:07 PM (IST)

ஷஃபான் பிறை: பிப்.3ல் பராஅத் இரவு அனுசரிப்பு!
செவ்வாய் 20, ஜனவரி 2026 3:13:07 PM (IST)








