» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 2 பேருக்கு 4 ஆண்டு சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

புதன் 10, டிசம்பர் 2025 8:32:02 AM (IST)

வீட்டின் பூட்டை உடைத்து பொருட்களை திருடி சென்ற 2 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. 

தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகேயுள்ள சேர்வைக்காரன் மடம் கிராமத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு தளவாய்புரம் பகுதியை சேர்ந்த முத்துராமன், ஏரல் அருகே உள்ள தம்படி பகுதியை சேர்ந்த சந்தன மகாராஜன் ஆகிய 2 பேரும் சேர்ந்து பூட்டி இருந்த 2 வீடுகளில் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அந்த வீடுகளில் இருந்த டி.வி. ஏ.சி. மிஷின், பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை திருடி ஆட்டோவில் கடத்தி சென்று உள்ளனர். 

இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் சாயர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 2பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி குற்றவியல் நடுவர் கோர்ட்டு எண்.1-ல் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி சுமதி குற்றவாளிகளான முத்துராமன், சந்தன மகாராஜன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital






Thoothukudi Business Directory