» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கார் டிரைவருக்கு அரிவாள் வெட்டு : நண்பர் கைது!
திங்கள் 17, நவம்பர் 2025 8:41:52 AM (IST)
சாத்தான்குளத்தில் மதுபோதையில் கார் டிரைவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய நண்பரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஓடக்கரை தெருவை சேர்ந்த பழனி மகன் பேச்சிமுத்து (30). கார் டிரைவர். இவரும், அதேபகுதியை சேர்ந்த தொழிலாளி வேல்முருகன்(34) என்பவரும் நண்பர்கள். நேற்று முன்தினம் இரவு சாத்தான்குளம் கரையடிகுளம் அருகே பேச்சிமுத்து மதுபோதையில் நின்று கொண்டிருந்தார். அப்போது வேல்முருகனும் மதுபோதையில் அங்கு வந்துள்ளார்.
இருவரும் அதே பகுதியில் உள்ள தரைமட்ட பாலம் அருகில் நின்று பேசி கொண்டு இருந்தனர். இருவருக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வேல்முருகன் தான் கையில் வைத்திருந்த நாடகத்திற்கு பயன்படுத்தும் அரிவாளால் பேச்சிமுத்துவை சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் தலை, கைகளில் பலத்த காயமடைந்த அவர் ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார். அங்கிருந்து வேல்முருகன் தப்பி ஓடிவிட்டார்.
அக்கம் பக்கத்தினர் பேச்சிமுத்துவை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற நிலையில் அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பேச்சி முத்துவின் தந்தை பழனி அளித்த புகாரின் பேரில், சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த வேல்முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டியில் ரயில் மோதி முதியவர் பலி!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 1:44:30 PM (IST)

காமராஜர் குறித்து அவதூறு வெளியிட்ட யூடியூபர் மீது தூத்துக்குடி காவல் நிலையத்தில் புகார்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 1:39:58 PM (IST)

சட்ட விரோதமாக மது விற்பனை: வாலிபர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 10:10:02 AM (IST)

திருச்செந்தூரில் பக்தர்கள் தங்கும் விடுதியை சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் ஒப்படைக்க தடை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:40:40 AM (IST)

மெழுவர்த்தி தீபத்தால் குளிர்சாதனப்பெட்டி வெடித்து சிதறி ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:36:03 AM (IST)

தூத்துக்குடி தெப்பக்குளத்தில் தண்ணீர் வெளியேற்றம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:16:35 AM (IST)










