» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் எஸ்ஐஆர் சிறப்பு முகாம் : ஆட்சியர் ஆய்வு
சனி 15, நவம்பர் 2025 11:44:23 AM (IST)

தூத்துக்குடியில் எஸ்ஐஆர் சிறப்பு முகாம் நடைபெறும் மையங்களில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆட்சியர் இளம்பகவத்ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம், இன்று மற்றும் நாளை, காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை நடக்கிறது. முகாம் நடைபெறும் மையங்களான பி.எம்.சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விகாஸா பள்ளிகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
பின்னர் ஆட்சியர் கூறும்போது, "சிறப்பு தீவிர திருத்தம் 2026 ன் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்யவும், திரும்ப பெறவும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்று நடைபெறும் சிறப்பு முகாமினை தொடர்ந்து வாக்காளர்களுக்கு மேலும் உதவிடும் வகையில் நாளை 16-11-2025 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, மேலும் ஒரு சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெற உள்ளது.
இம்முகாமில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் பிற துறை பணியாளர்கள் வாக்காளரிடம் இருந்து படிவங்களை பூர்த்தி செய்வதற்கும், படிவங்களை திரும்ப பெறுவதற்கும் உதவி செய்ய உள்ளனர். இந்த நல்ல வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வயல் வேலைக்குச் சென்ற மூதாட்டி ரயில் மோதி உயிரிழப்பு
புதன் 10, டிசம்பர் 2025 11:03:21 AM (IST)

பைக் நிலை தடுமாறி விழுந்ததில் துறைமுக தொழிலாளர் பரிதாப சாவு
புதன் 10, டிசம்பர் 2025 10:54:35 AM (IST)

தூத்துக்குடியில் தெரு நாய்கள் கடித்து மக்கள் பாதிப்பு : மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
புதன் 10, டிசம்பர் 2025 10:00:34 AM (IST)

திருச்செந்தூர் கோயிலில் மார்கழி மாதம் பூஜைகள் : அதிகாலை 3 மணிக்கு நடை திறப்பு!
புதன் 10, டிசம்பர் 2025 8:39:31 AM (IST)

கள்ளக்காதலை கண்டித்த வாலிபர் சரமாரி வெட்டிக் கொலை: அண்ணன்-தம்பிக்கு போலீஸ் வலைவீச்சு!!
புதன் 10, டிசம்பர் 2025 8:34:30 AM (IST)

வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 2 பேருக்கு 4 ஆண்டு சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 10, டிசம்பர் 2025 8:32:02 AM (IST)










