» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து பிறந்த நாள் விழா : தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை

சனி 15, நவம்பர் 2025 10:53:52 AM (IST)



தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

தூத்துக்குடி நகர தந்தை என அழைக்கப்படும் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து 156 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் எம்.ஜி.ஆர் பூங்கா அருகில் அமைந்துள்ள அன்னாரது மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், மேயர் பெ.ஜெகன், ஆணையர் சி.ப்ரியங்கா, ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதுபோல பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மரியாதை செலுத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தந்தை இறந்த மனவேதனையில் மகன் தற்கொலை!

புதன் 10, டிசம்பர் 2025 8:01:45 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education





Thoothukudi Business Directory